தமிழ் முரசு
பொங்கல் பரிசு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம்!
முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு - ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கீடு
கோப்புப்படம்: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதற்காக அரசு ரூ.6,936 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் இந்தத் தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
© 2026 தமிழ் முரசு - இணைய இதழ்