காசி தமிழ் சங்கமம் 4.0: வாரணாசியில் வண்ணமயமான ரங்கோலி போட்டி! 🎨

Tamil News Today
By -
0

 காசி தமிழ் சங்கமத்தின் நான்காம் ஆண்டு விழா அடுத்த மாதம் நடைபெற இருப்பதை ஒட்டி, வாரணாசியில் உள்ள அஸ்ஸிகாட் பகுதியில் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில் ஏராளமனோர் பங்கேற்று, காசியின் வளமான பாரம்பரியத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கோலங்களைத் தீட்டினர்.



பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் மாதிரிகள் உட்பட, நாட்டுப்புற கலை, கட்டிடக்கலை, புராணங்கள் மற்றும் காசியிலும் தமிழகத்திலும் உள்ள கலாச்சார சின்னங்களை எடுத்துரைக்கும் விதமாக இடம்பெற்ற கோலங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த போட்டி நாட்டின் கலாச்சார ஒற்றுமைக்கு உதாரணமாக அமைந்ததுடன், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கங்களை வலுப்படுத்துவதாக இருந்தது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!