இவரது கணவர் காவல் துறையில் பணியாற்றினார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டாம் நிலை காவலராக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வேலை பார்த்து வந்த இளம் பெண்ணின் கணவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.
கருணை அடிப்படையில் வேலை
இதனால் கருணை அடிப்படையில் அவரது மனைவியான இளம் பெண்ணுக்கு, வாரிசு அடிப்படையில் காவல் துறையில் டேட்டா என்ட்ரி செய்யும் ஆபரேட்டராக பணி கிடைத்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த இளம் பெண், அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவருக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு, அவர் தற்போது ஓசூரில் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்த பெண், பார்வையிழந்த அவரது தாயார் மற்றும் பிள்ளைகளோடு வசித்து வருகிறார்.
தினந்தோறும் இளம் பெண் காவல் நிலையத்தில் பணிகளை முடிந்துவிட்டு ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்து மூலம் தன்னுடைய கிராமத்திற்குச் செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 16 ஆம் தேதி மாலை பணி முடிந்து ஒரு தனியார் பேருந்தில் தனது கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, அவர் தனது வீட்டிற்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.
லிப்ட் கொடுப்பதாகக் கூறி அத்துமீறல்
பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு அவர் நடந்து சென்ற போது, பெண்ணின் ஊரைச் சேர்ந்த 37 வயது ஓட்டுனர் மூர்த்தி என்பவர் தன்னுடைய டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்திருக்கிறார். தானும் ஊருக்குத்தான் செல்கிறேன் எனக்கூறி, வாகனத்தில் ஏறுங்கள் என்று அழைத்திருக்கிறார். சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கையினாலும், காவல் துறையில் பணிபுரியும் பெண் என்பதாலும், தைரியமாக அந்த டெம்போ டிராவலர் வாகனத்தில் ஏறி இருக்கிறார்.
சிறிது தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்ற மூர்த்தி, திடீரென்று டெம்போ டிராவலர் வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த காவல் துறையில் பணியாற்றிய பெண்ணிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கண்டித்திருக்கிறார். காவல் துறையில் பணிபுரிபவர் என்றும் பாராமல் இளம் பெண்ணைத் தாக்கி, அவரிடம் தவறாக நடக்க முயன்று துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் மூர்த்தியை தள்ளிவிட்டு வாகனத்தில் இருந்து குதித்த அந்த பெண், தப்பித்து தன்னுடைய வீட்டிற்குச் சென்றுள்ளார். நடந்த சம்பவம் குறித்து, இளம்பெண் தன்னுடைய வயதான பார்வையிழந்த தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்:
"எங்க அம்மா பாத்தா பிளைண்ட் ஆயிட்டாங்க. நெக்ஸ்ட் வீட்டுக்காரர் பார்த்தா அவரும் இறந்துட்டாரு. என்னன்ன என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு. அம்மா வீட்ல நான் இருந்து, கொஞ்ச நல்லபடியா பசங்களையும் வளர்த்துகிட்டு அம்மாவ பார்த்துகிட்டு காலத்த ஓட்டலாம்ன்னா, வெளில போய் டூட்டினும் ஒழுங்கா பார்த்தா, பார்த்துட்டு வீட்டுக்கு வந்தாக்கூட அண்ணா, இந்த மனுஷங்களெல்லாம் என்னால வாழவே முடியாதுங்க சார். அவனை அப்படி ஒரு டார்ச்சர் சார். என் உடம்பெல்லாம் சார், அவன் நாசமாக்கிட்டு, வெளில போய் சொன்னீன்னா உன்ன விடவே மாட்டேன் நானு, சாவடிச்சிருவேன்றான் சார். நான் செத்தா என் பசங்களுக்கு யார் சார் பாதுகாப்பு? எங்க அம்மாவுக்கு யார் சார் பாதுகாப்பு?"
தலைமறைவான ஓட்டுநருக்கு வலைவீச்சு
அண்ணன் என வழக்கமாகத் தான் அழைக்கும் நபரே தன்னிடம் அத்துமீற முயன்றதாக அந்தப் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்தார். காவல் துறையில் பணியாற்றும் சக ஊழியருக்கு நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை தீவிரமாகத் தேடி வந்தனர்.
அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரின் டெம்போ டிராவலர் வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். உடனடியாக மூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்றும், காவல் துறையில் பணியாற்றும் பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
பெண் போலீசுக்கே இந்த நிலைமையா? வேனில் அத்துமீறல்!
By -
மே 20, 2026
0
ஓசூர்:
ஓசூரில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய காவல் துறையில் பணியாற்றும் பெண் ஊழியரை, வீட்டில் விடுவதாக டெம்போ டிராவலர் வாகனத்தில் அழைத்துச் சென்று, ஓட்டுனர் ஒருவர் அத்துமீற முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர், பாகலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 36 வயது இளம் பெண்.
Tags:
