25 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை


தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 25 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டல்களை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 48,260 சத்துணவு மையங்களில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் 60 வயதிலும், சமயலர்கள், சமையல் உதவியாளர்கள் 58 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர். இதுதவிர பணிக்காலத்தின்போது ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளாலும் காலியிடங்கள் உருவாகிறது.  இதுபோன்ற காரணங்களால் உருவாகும் காலிப்பணியிடங்கள் மட்டும் மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேல் நிரப்பப்பட வேண்டியுள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் corana virus பரவல் நெருக்கடி காரணமாக சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அவர்களுக்கான பொருட்கள் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளும், கல்லூரிகளும் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சத்துணவு மையங்களும் செயல்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது.  இதையடுத்து மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 12 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், உட்பட சமையலர், சமையல் உதவியாளர்கள் என 25 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேர்வுக்குழு 1ல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராகவும், சம்பந்தப்பட்ட தாசில்தார், சம்பந்தப்பட்ட பிடிஓ ஆகியோர் உறுப்பினரர்களாக இருப்பர்.  தேர்வுக்குழு 2ல் கலெக்ட்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) தலைவராகவும், சம்பந்தப்பட்ட தாசில்தார், பிடிஓ ஆகியோர் உதுப்பினர்களாவும் இருப்பர்.

தேர்வுக்குழு 3ல் கலெக்ட்டரின் நேர்முக உதவியாளர் தலைவராகவும், சம்பந்தப்பட்ட தாசில்தார்,  பிடிஓ ஆகியோர் உதுப்பினர்களாவும் இருப்பர்.இதற்கான நடவடிக்கையை சமூக நல ஆணையர், கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Sl.No.
District
Apply Link
1.
Trichy District DBCWO Recruitment 2020 Notification & Application form (40 Cook Posts)
2.
Karur District DBCWO Recruitment 2020 Notification & Application form (21 Cook Posts)
3.
Ariyalur District DBCWO Recruitment 2020 Notification & Application form (10 Cook Posts)
4.
Tiruppur District DBCWO Recruitment 2020 Notification & Application form (33 Cook Posts)
5.
Vellore District DBCWO Recruitment 2020 Notification & Application form (06 Cook Posts)
6.
Thoothukudi District DBCWO Recruitment 2020 Notification & Application form (44 Cook Posts)
7.
Erode District DBCWO Recruitment 2020 Notification & Application form
8.
Cuddalore District DBCWO Recruitment 2020 Notification & Application form (58 Cook Posts)
9.
Chennai District DBCWO Recruitment 2020 Notification & Application form (14 Cook Posts)

Post a Comment

0 Comments