கனடாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்தால், மேலும் பல வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்தால், மேலும் பல வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்தால், மேலும் பல வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் கொரோனா பாதிப்புக்கு 28 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆயிரத்து10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கொரோனா பாதிப்பின் பல மோசமான நிலையை கடந்து விட்டதாகவும், கட்டுப்பாடுகளை தளர்த்தினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்காமல் போய்விடும் என்று கூறினார். 

மேலும், ஊரடங்கு உத்தரவு மே 1 ஆம் தேதி வரை தொடரும் என்று கூறிய அவர், அதுவரை ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவிதார்.

Post a Comment

0 Comments