தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு - Tamil News Today
திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து வரி உயர்வு அறிவிப்பு: 3 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை ஊரடங்குக்கு பின் மருத்துவ சேவை: சிறப்பு குழுவை அமைத்தது எய்ம்ஸ் குஜராத்தில் அதிக உயிரிழப்புக்கு 'எல்' வகை வைரஸ் காரணமா? தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மத்திய அரசின் பொறுப்பு: சிவசேனா 'கடினமாக உழைக்கும் அமெரிக்க அதிபர்' மக்கள் புகழ்வதாக டிரம்ப் கூறுகிறார் ஏப்-28: பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் COVID-19 Dashboard as on : 28 April 2020, 11:10 GMT+5:30 தமிழ்நாடு : 1,937-->பாதிப்பு *** 812-->சிகிச்சையில் *** 1,101-->மீண்டவர்கள் *** 24-->இறப்பு *** இந்தியா : 29,435-->பாதிப்பு *** 21,632-->சிகிச்சையில் *** 6,869-->மீண்டவர்கள் *** 934-->இறப்பு *** உலகம் : 30,62,514-->பாதிப்பு *** 19,30,339-->சிகிச்சையில் *** 9,20,726-->மீண்டவர்கள் *** 2,11,449->இறப்பு ***

புதிய பதிவுகள்

தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு 


Tamilnadu Handlooms and Textiles Recruitment
Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019

தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு : சென்னை, கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஏழு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவியின் பெயர் & காலியிடங்களின்  எண்ணிக்கை 


வ. எண் 
பதவியின் பெயர்
வகுப்பு
அதிகபட்ச வயது
காலி பணியிடங்களின் எண்ணிக்கை
1
2
3
4
5
1.
அலுவலக உதவியாளர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரப்பினர்
32
2
பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர)
32
2
பொதுப்போட்டி
30
2
ஆதிதிராவிடர்
35
1

கல்வித் தகுதி மற்றும் சிறப்புத் தகுதி 
8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விகிதம் 
ரூ.15,700-50,000/- (Level-I)

மேற்காணும் கலிப்பாணியிடமானது இனசுழற்சி அடிப்படையிலானது.

1. விண்ணப்பதாரர்களின் குறைந்த வயது 18 ஆகும்.  அதிகபட்ச வயது கலம்  எண்  4 - ல  குறிப்பிட்டுள்ளவாறு ஆகும் (01/08/2019 அன்று உள்ளபடி)
2. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் உச்ச வயது வரம்பில் கூடுதலாக வழங்கப்படும்.
3. விண்ணப்பங்களை, கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனர் அலுவலகம், குறளகம், 2-ம்  தளம், சென்னை - 108 என்ற முகவரியில் அலுவலக நேரங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனர், குறளகம் 2-ஆம் தளம் சென்னை-108 என்ற முகவரிக்கு 23/09/2019 பி.ப, 5.45 மணிக்குள் பதிவுத்   தபாலில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.  மேல் உறையின்  மீது "அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம்" என பாரிய எழுத்துக்களில் தவறாது குறிப்பிட வேண்டும்.
5. இப்பணியிடத்திற்கு பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
6. தகுதி இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும், 23/09/2019 பிற்பகல் 5.45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும், உரிய சான்றாவணங்கள் இல்லாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.
7. விண்ணப்பங்களுடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை (அரசு/அரசு சார்ந்த அமைத்து வழங்கியவை தானே சான்றொப்பமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும்.
அ. கல்விச் சான்றிதழ் 
ஆ. வயது குறிப்பிட்ட கல்விச் சான்றிதழ்/அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய பிறப்புச் சான்றிதழ்.
இ சாதிக் சான்றிதழ் 
ஈ. முன்னுரிமைச் சான்றிதழ் 
உ.இருப்பிடச் சான்றிதழ். 
ஊ. குடும்ப அட்டை.
எ.அரசிதழ் பதிவு பெற்ற அலுவலகளிடமிருந்து விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ், புகைப்படமும் சான்றொப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஐ.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு அட்டை.
ஒ. இதர சான்றிதழ்கள்.
ஓ. மாற்றுத்திறனாளிகளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ்.
8. இப்பணி நியமனத்திற்கான நேர்காணல் மற்றும் அது தொடர்பானவற்றை மாற்றியமைப்பதற்கும், நிறுத்தி வைப்பதற்கும், இரத்து செய்வதற்கும் கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

இணையதள விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப நாள் 
  - 02/09/2019
இணையதள விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி நாள் – 23/09/2019

அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் இணைய முகவரி


No comments