நீட் தேர்வில் தோல்வி: தஞ்சாவூர், திருப்பூர் மாணவிகள் தற்கொலை

#tamil news today, tamil news for today, tamil news on today, tamil news today live, tamil news paper for today, tamil news today paper, tamil news today cinema, tamil news today latest, tamil news today online

நீட்தேர்வில் தோல்வி: தஞ்சாவூர், திருப்பூர் மாணவிகள் தற்கொலைநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த திருப்பூர் மாணவி ரித்துஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை. ரிதுஸ்ரீ  12-ஆம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில் நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்துள்ளதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.  இதில் மேலும் துயரம் என்னவென்றால் நன்றாக படிக்கக்கூடிய மாணவி ரிதுஸ்ரீ நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தஞ்சாவூர் மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் ஒடிசாவை தவிர்த்து பிற மாநிலங்களில் 5-ஆம் தேதியும், ஒடிசாவில் 20-ஆம் தேதியும் நடைபெற்றது.  இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (05/06/2019) மதியம் இணையத்தளத்தில் வெளியிட்டது.

இதில் நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று மதியம் 1.35 மணியளவில் வெளியாகின. நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

Post a Comment

0 Comments