Imad Wasim leads Pakistan to dramatic victory over Afghanistan at World Cup 2019, ICC Cricket World Cup 2019, Afghanistan Cricket Team, Pakistan Cricket Team, pakistan vs Afghanistan, pakistan vs Afghanistan news, pakistan vs Afghanistan latest news, pakistan vs Afghanistan result
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 36 வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்தீப் நயீப் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்கர் ஆப்கன், நஜ்புல்லா சட்ரன் தலா 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். ஓபனிங் பேட்ஸ்மேன் ரஹமத் ஷா 35 ரன்னில் அவுட்டானார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹிப் அப்ரிடி 4 விக்கெட்டும், இமாத் வாஷிம், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஷதாப் கான் 1 விக்கெட்டை சாய்த்தார்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானின் சுழலில் சிக்கி தடுமாறியது. தொடக்கவீரர் பாக்கர் சமான் டக் அவுட் முறையில் முதல் ஓவரிலே வெளியேறினார். இமாம் 36, பாபர் ஆசாம் 45, ஹபீஸ் 19, ஹாரீஸ் 27, சர்பராஸ் அகமத் 18, சதாப் கான் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தாலும் இமாத் வாசிம் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடினார். 54 பந்துகளில் 5 பவுண்டரி உதவியுடன் 49 ரன்கள் எடுத்த இமாத் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார். வஹாப் ரியாஸும் கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடி 9 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 230 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்துகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி போராடி இந்த வெற்றியை தனதாக்கியது.
COMMENTS