தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 


தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளெவின், தயாமின் உள்ளிட்ட காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன.

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக  வைத்துக் கொள்ளும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொள்வது நல்லது.

முந்திரியில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக  விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால், பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமலே தடுக்கமுடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படக் கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

முந்திரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பாயாசம், கேசரி, பொங்கல் போன்றவற்றிற்கு சுவைக்காக சேர்க்கப்படும் முந்திரியில் நிறைந்துள்ள நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம், முந்திரியை சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

முந்திரியை ஸ்நாக்ஸ் நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவில் முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும்

நிம்மதியான தூக்கம்


தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சரியாக தூக்கமின்றி தவிப்பார்கள். இக்காலகட்டத்தில் முந்திரி பருப்பை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின் பெண்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். நரம்புகள் நமது உடலில் மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மிகவும் அவசியம். முந்திரி பருப்பில் இவை இரண்டும் அதிகம் உள்ளன. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. எனவே அடிக்கடி முந்திரி சாப்பிடுவது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

சிறுநீரகக் கற்கள்


சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதைத் சுலபத்தில் தடுக்கலாம். எடை குறைவு முந்திரி பருப்பிற்கு எடை கூடவும், குறைக்கவும் செய்யும் சக்தி உண்டு. மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தவர்களை, முந்திரி சாப்பிடாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் எடை அதிகரிப்பது குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைமுடி

நாற்பது வயதுகளை தொடும் போதே அனைவருக்கும் தலைமுடி நரைக்கிறது. முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு தாதுப்பொருள் உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து.முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது. தலைமுடி ஆரோக்கியம் காக்க முந்திரி பருப்புகளை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும். இரத்த அழுத்தம் இன்று பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனையாக ரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கிறது. முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது து. எனவே உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க முந்திரி பருப்புகளை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நன்மை தரும்.

வலிமையான எலும்புகள்

கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுகளும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவையிரண்டும் அவசியம். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 300-750 கிராம் மக்னீசியம் அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது. முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம். புற்றுநோய் மனிதர்களை பாதிக்கும் கொடிய நோய்களில் புற்று நோய் ஒன்று. முந்திரி பருப்பில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் அதிகம் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது

இதயம்

பலரும் கொழுப்புக்கள் நிறைந்துள்ள உணவை முற்றிலும் தவிர்ப்பது இதயத்திற்கு நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நமது உடலுக்கு கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய நல்ல கொழுப்புக்கள் முந்திரி பருப்பில் அதிகம் நிறைந்துள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இதயத்தை பாதுகாக்க முடியும்.

செரிமானமின்மை

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை ஏற்படுகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை முந்திரி பருப்புஅற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீரவும் முந்திரி பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் தீரும்.

Post a Comment

0 Comments