பூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம் - Tamil News Today
திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து வரி உயர்வு அறிவிப்பு: 3 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை ஊரடங்குக்கு பின் மருத்துவ சேவை: சிறப்பு குழுவை அமைத்தது எய்ம்ஸ் குஜராத்தில் அதிக உயிரிழப்புக்கு 'எல்' வகை வைரஸ் காரணமா? தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மத்திய அரசின் பொறுப்பு: சிவசேனா 'கடினமாக உழைக்கும் அமெரிக்க அதிபர்' மக்கள் புகழ்வதாக டிரம்ப் கூறுகிறார் ஏப்-28: பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் COVID-19 Dashboard as on : 28 April 2020, 11:10 GMT+5:30 தமிழ்நாடு : 1,937-->பாதிப்பு *** 812-->சிகிச்சையில் *** 1,101-->மீண்டவர்கள் *** 24-->இறப்பு *** இந்தியா : 29,435-->பாதிப்பு *** 21,632-->சிகிச்சையில் *** 6,869-->மீண்டவர்கள் *** 934-->இறப்பு *** உலகம் : 30,62,514-->பாதிப்பு *** 19,30,339-->சிகிச்சையில் *** 9,20,726-->மீண்டவர்கள் *** 2,11,449->இறப்பு ***

புதிய பதிவுகள்

பூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்

#tamil news today, tamil news for today, tamil news on today, tamil news today live, tamil news paper for today, tamil news today paper, tamil news today cinema, tamil news today latest, tamil news today online

பூர்வஜென்ம வினைகள் தீர்க்கும் பரிகாரங்கள் 


பூர்வஜென்ம வினைகள் தீர்க்கும் பரிகாரங்கள்


பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினைத் தாக்கத்தால் வருபவை.

பல பிறவிப் பாவம் என்று கூறுகிறார்களே பல பிறவியில் ஆத்மா என்ன பாவம் செய்தது என்பதை அறியமுடியுமா ?

கர்மக்காரன் சனி என்றால், சனிக்கு திரிகோணத்திலுள்ள கிரகங்களே முன்ஜென்மங்களில் செய்த கர்மவினையை உணர்த்தும் கிரகங்கள், சனிக்கு திரிகோணத்தில் அதிக கிரகங்கள் இருந்தால் பாவம் அதிகம் செய்தவர்கள் என்றும், குருவுக்கு திரிகோணத்தில் அதிக கிரகம் இருந்தால் புண்ணியம் அதிகம் செய்தவர்கள் என்றும் உணரலாம்.

கிரகங்களை சுப கிரகம், அசுப கிரகம் என இரண்டாக வகைப்படுத்தலாம்.

சுபகிரகங்கள் : குரு, சுக்கிரன், புதன்.

அசுப கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது.

கர்மக்காரன் சனிக்கு திரிகோணத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் இருந்தால், ஜாதகர் கணக்கிலடங்கா புண்ணியம் செய்தவர் என அறியலாம்.  சனிக்கு திரிகோணத்தில் சுப அசுப கிரகங்கள் என கலந்திருந்தால் ஜாதகர் பாவ புண்ணியம் இரண்டும் செய்தவர் என அறியலாம்.  பல ஜாதங்களில் பாவ, புண்ணியங்கள் கலந்தே இருக்கும்.

சனிக்கு திரிகோணத்தில் பாவகிரங்கள் மட்டும் இருந்தால், அளவிட முடியாத பாவங்களைச் செய்தவர் என்பதை அறியமுடியும்.  சனிக்கு திரிகோணத்தில் நிற்கும் கிரகங்கள் மூலம் என்ன பாவம்- புண்ணியம் செய்திருக்கலாம் என காணலாம்.

சூரியன்

சனிக்கு திரிகோணத்தில் சூரியன் நின்றால், தந்திக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யத் தவறியது.  கொடுமைப்படுத்தியது, பொறுப்புக்களை தட்டிக் கழித்தல், ஆண்  வாரிசுகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுதல், ராஜ துரோகம் , அதிகாரத்தை தவராகப் பயன்படுத்தியது.  சிவாலயங்களை அசுத்தம் செய்தது.  ஒருவருக்கு கண் பார்வை போகக் காரணமாக இருந்தது,  முதலாளிக்கு துரோகம் செய்தது போன்றபாவங்களைச்  செய்திருக்கலாம்.  அதன்பலனாக, இந்தப் பிறவியில் தந்தையின் ஆதரவு கிடைக்காமல்போவது, தந்தை-மகன்  கருத்து  வேறுபாடடு, பார்வைக்குறைபாடு, ஆண் வாரிசு இன்மை, அரச தண்டனை அல்லது அரசின் ஆதரவின்மை.  முதலாளியால் தொல்லை அல்லது உழைப்பிக்கேற்ற ஊதியம் இன்மை அல்லது சரியான தொழில் வேலை அமையாமல் போவது போன்ற அசுபப்  பலன் மிகுதியாக இருக்கும்.

ஜனன கால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் சூரியன் இருந்தால் அல்லது சூரியன், சனி, இனவிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்.

தந்தையை நல்ல முறையில் பராமரித்தல், தந்தை ஸ்தானத்தில் இருப்பவருக்கு வேண்டிய உதவிகள் செய்தல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் வைத்தியத்திற்கு உதவுதல், சிவாலயங்களில் உழவாரப்பணி செய்தல், சிவாலயங்களில் விளக்கேற்ற எண்ணெய் தானம் செய்தல் போன்ற புண்ணியம் செயல்களைச்  செய்தல் சுப பலன் மிகும்.

சூரியன், சனி, சம்பந்தத்தால் உயிரணு குறைபாடு இருந்து, குழந்தை பிறக்கவில்லை என்றால், தொடர்ந்து ஒரு வருடம் கோசாலையைப் பராமரிக்க வேண்டும் அல்லது தினமும் இரண்டு மணி நேரம் கோசாலையில் அமர்ந்து சிவபஞ்சாட்ரம் பாராயணம் செய்யவேண்டும்.

சந்திரன்

சனிக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால், தாயைப் பராமரிக்கத் தவறியது.  இழிவுபடுத்தியது.  கலப்படமான உணவுப் பொருளை விற்றது.  ஒருவருக்கு இடு  மருந்து செய்தது.  அம்மன் உபாசகர்களை அவமதித்து, அம்மன் கோவிலை அசுத்தப்படுத்துதல், மாற்றான் மனைவி மீது ஆசைப்படுத்தல், பெண் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிடுதல், பெண்களை அவமதித்தல், கண் பார்வை கெட காரணமாக இருத்தல், விளைநிலங்களை நாசப்படுத்துதல் போன்ற பாவங்களைச் செய்த குற்றத்தின் பதிவாகும். இதன்பலனால், இந்தப் பிறவியில் தாயன்பு கிடைக்காமல்போவது, பெண் குழந்தையின்மை, பெண்களால் அவமானம், வம்பு, வழக்கு, உணவு, ஒவ்வாமை, செரிமானக்கோளாறு, அடிக்கடி ஏற்படும் இடமாற்றம், அலைச்சல் மிகுந்த வேலை, வீண்விரயம், மன உளைச்சல், திருமணத்தடை போன்ற அசுபபபலன் மிகுதியாகும்.

ஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் சந்திரன் அல்லது சனி, சந்திரன், சம்பந்தமிருப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:

தாயைப் பராமரித்தல், வயதான பெண்களுக்கு உதவுதல், அம்மன் வழிபாடு, உணவு தானம் செய்யவேண்டும்.  பிரதோஷ களங்களில் மாவிளக்குச்செய்து சிவனுக்கு நெய் தீபமேற்ற சுபப் பலன் மிகுதியாகும்.

தாய்-தந்தை இல்லாமல் பிறப்பு  இல்லை. தாய்-தந்தை ஆசியே பல பிறவிப் பாவங்களைக் கடக்க உதவும் எளிய, வலிய பரிகாரம்.

செவ்வாய்

சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் இருந்தால், சகோதரனை ஏமாற்றுதல், சகோதரர்களின் சொத்துக்களை அபகரித்தல், மற்றவர்களின் பொருட்களை அபகரித்தல், கால்நடைகளைத் துன்புறுத்துதல், கொலைசெய்தல், பிறரை ஏமாற்றிப் பணம் பறித்தல், வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றுதல், பெண்களை பலவந்தமாகக் கற்பழித்தல், வீண் வம்புச் சண்டைக்கு  போதல், கணவன்-மனைவி பிரிவினைக்குக் காரணமாக இருத்தல் போன்ற பாவங்களைச்  செய்த குற்றத்தின் பதிவு.  இதன்பலனாக இந்தப் பிறவியில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமை, சொத்துக்கள் விரயம், சொல்துக்கள்மூலம் வம்புவழக்கு, சொத்து பறிபோதல், சரியான தொழில், உத்தியோகமின்மை, கடன்தொல்லை, ரத்த சம்பந்த உறவினர்கள் பகை, ரத்த சம்பந்தமான நோய், உழைப்பிற்கேற்ற ஓழ்த்தியமில்லாமை, வம்புவழக்கு தேடிவருதல் , பணவிரயம் கணவன்-மனைவி பிரிவினை ஏற்படும்.

ஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் அல்லது செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:

பூமி தானம், உடன்பிறந்தவர்களுக்கு உதவிசெய்தல், ரத்த தானம், பிரிந்த கணவன்-மனைவியைச் சேர்த்துவைத்தல் மற்றும் முருகன்  வழிபாடுசெய்ய சுபப்  பலன் மிகும்.

சனி, செவ்வாய் சம்பந்தத்தால்  வீடு,வாகனம் அமைவதில் தாமதம், சொத்து தொடர்பான பிரச்சினை இருந்தால், செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் முருகனுக்கு மாதுளை  கலந்த தயிர் சத்தம் நிவேதனம் செய்ய வேண்டும்.  கணவன்-மனைவி பிரிவினை, கருத்து வேறுபாடு மறைய செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் சிவப்பு வஸ்திரம், அரளி மாலை அணிவிக்கவேண்டும்.

புதன்

சனிக்கு திரிகோணத்தில் புதன் இருந்தால், ஜாதகர் சென்ற பிறவியில் கல்விக் கடங்களை நிறுவுதல், வித்யா தானம் செய்தல்,  ,விஷ்ணு ஆலயங்களைப் 
பராமரித்தல், நண்பர்களுக்கு உதவுதல், பூமி தானம் செய்தல், நேர்மையான தொழில் போன்ற புண்ணியச்செயல் செய்தவர் இதன்பலனாக, இந்தப் பிறவில் கல்வியில் சிறந்து விளங்குதல், நண்பர்களின் அன்பு, ஆதரவு, நல்ல நண்பர்கள், தொழில் மேன்மை, தொழில் கூட்டாளி ஆதரவு, நிலபுலன் சேர்க்கை, தாய்மாமன் ஆதரவு கிடைக்கும்.

சனி, புதன் சமசப்தமப்  பார்வை, புதனுக்கு அடுத்து சனி இருந்தால், மேற்கூறிய பழங்கள் அசுபமாக நடக்கும்.  இதற்குப் பரிகாரமாக விஷ்ணு வழிபாடு, பச்சைப் பயறு, சுண்டல் தானம், சக்கரத்தாழ்வார் வழிபாடு ஆகியவை நல்ல பலன் தரும்.

No comments