துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா? ஆந்திர அரசியலில் பரபரப்பு


துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா? ஆந்திர அரசியலில் பரபரப்பு


top tamil news, tamil nadu news in tamil, today news in tamil live, flash news in tamilnadu today, national news in tamil , world tamil news, india today tamil,

ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்பொழுது ஐந்து துணை முதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் நடைபெற்ற கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் ஐந்து துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்றும்,  இவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒரு பட்டியல் இனத்தவரும்,  ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரும், ஒரு சிறுபான்மையினரும், காபு இனத்தை சேர்ந்த ஒருவரும் பதவி ஏற்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவின் முதலவர் ஜெக்ன மோகன் ரெட்டியின் வேகத்திற்கு ஏற்ப, தற்போது அம்மாநில அரசியல் வட்டாரத்திலும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆந்திர மாநிலத்தில் ஐந்து துணைமுதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோகாவும் பதவியேற்கலாம் என்றும் தற்போது தகவல்கள்  வெளியாகின்றன.

இதற்கு முன்பு ஆந்திராவின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இரண்டு துணை முதல்வர்கள் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.top tamil news, tamil nadu news in tamil, today news in tamil live, flash news in tamilnadu today, national news in tamil , world tamil news, india today tamil,

Post a Comment

0 Comments