தமிழக அரசு அதிரடி அனுமதி தமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா ஒளிபரப்பாலம் !

தமிழக அரசு அதிரடி அனுமதி தமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா ஒளிபரப்பாலம் !


top tamil news, tamil nadu news in tamil, today news in tamil live, flash news in tamilnadu today, national news in tami, world tamil news, india today tamil,


சென்னை: 24 மணி நேரமும் தமிழகத்தில் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

24 மணி நேரமும் தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு 28-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது

மேலும் திரையரங்குகளை 24 மணி நேரம் தமிழகத்தில் திறந்து கொள்ளவும், அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிறு திரையரங்குகள் அல்லது மல்டிபிளக்ஸ், மால் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது. அனைத்து திரையரங்குகளுக்கும் மற்றும் வணிக நிறுவனங்கள்   ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும்.

சட்டம்-ஒழுங்கு பாதிப்புகள் இருக்கும் பகுதிகளில் கடைகளை திறந்து மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்க ஒரு அறிவிப்பு என்று திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கூறினார். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வசூல் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே திரையிடும், நேரத்தை அதிகரித்துள்ளதன் காரணமாக, தயாரிப்பாளர்களுக்கும் அதிக வசூல் கிடைக்கும், டிக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது, போன்றவையும் குறையும் என்றும் தெரிவித்தார்.

toptamil news, tamil nadu news in tamil, today news in tamil live, flash news intamilnadu today, national news in tami, world tamil news, india today tamil,

Post a Comment

0 Comments