டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார் ஆஸி.யின் ஆஷ்லி பர்டி

டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார் ஆஸி.யின்ஆஷ்லி பர்டி

Australian tennis player Ashleigh Barty is now the world's number one female player

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6–3, 7–5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை (ஜெர்மனி) தோற்கடித்து மகுடம் சூடினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பர்மிங்ஹாம் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் முதன்முறையாக உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜூலியா ஜார்ஜஸை 6-3, 7-5 என நேர்செட்களில் வென்றார் ஆஷ்லி.  23 வயதான ஆஷ்லி பர்டி, கடந்த மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது பர்மிங்ஹாம் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகாவை பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். கடந்த 1976-இல் ஆஸி. வீராங்கனை எவோன் கூலாங் காவ்லி 2 வாரங்கள் முதலிடத்தை வகித்து இருந்தார். ஆடவர் பிரிவில் ஜான் நியூகோம்ப், பேட் ராப்டர், லெய்டன் ஹெவிட் ஆகியோர் முதலிடத்தை வகித்துள்ளனர். நம்பர் ஒன் இடத்தைப் பெற்ற ஆஷ்லிக்கு டென்னிஸ் ஆஸ்திரேலியா தலைவர் கிரெய்க் டைலி பாராட்டியுள்ளார்.
ஆஸி. நாட்டு பத்திரிகைகளும் அவரை டென்னிஸ் உலகின் புதிய ராணி என பாராட்டியுள்ளன. ஆஷ்லி பார்ட்டி ஆஸ்திரேலிய பூர்வக் குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

புதிதாக அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1976–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இவோன் கூலாகோங் முதலிடத்தில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில்நம்பர் ஒன் இடத்தை அலங்கரிக்கும் 27–வது வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆவார்.

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6–3, 7–5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை (ஜெர்மனி) தோற்கடித்து மகுடம் சூடினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1976–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இவோன் கூலாகோங் முதலிடத்தில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில்நம்பர் ஒன் இடத்தை அலங்கரிக்கும் 27–வது வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆவார்.

Post a Comment

0 Comments