சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்

#tamil news today, tamil news for today, tamil news on today, tamil news today live, tamil news paper for today, tamil news today paper, tamil news today cinema, tamil news today latest, tamil news today online

சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்

கும்பகோணம் அருகாமையில் உள்ள அழகாபுத்தூர் சிவன் கோயிலில்  சக்கரம் ஏந்திய  கோவில் உள்ளது.

சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்

நாயன்மாரான புகழ்த்துணையார் என்பவர் அங்கு அன்னதானம் செய்து வந்துள்ளார்.  ஒருமுறை அவரை சோதிக்கவிரும்பிய சிவன், பஞ்சத்தை உருவாக்கியுள்ளார்.  கோவிலில் தெய்வத்திற்கு நேவேத்யம் செய்ய அங்கு வழியில்லை.  இந்த நிலையில், ஒருநாள்அரசலாற்றில் ஊற்று தோண்டி அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தார்.  மேலும்குடம் நழுவி சிவலிங்கத்தின் தலையில் விழவே சேதம் ஏற்பட்டது. 

இந்த குற்றத்திற்கு பரிகாரமாக மூச்சடக்கி அவர் உயிர் விடத்துணிந்தார் நாயனார். அப்போது அசரீரியாக, புகழ்த்துணையரோ!  இன்று முதல் தினமும்  பொற்காசு தருகிறேன்.  இங்குள்ள படியில் அந்த காசு இருக்கும்.   அதன் மூலமாக அடியாருக்கு அன்னதானம் செய்யுங்கள் என வாக்களித்தார் சிவன்.  இதனால் ஸ்வாமிக்கு படிக்காசுநாதர், வர்ணபுரீஸ்வரர் (சுவர்ணம் தங்கம்), குபேரலிங்கம் என பெயர் வந்தது.  அம்மனின் பெயர் அழகம்மை.
   
இக்கோயிலில் முருகனின் சன்னதி சிறப்புமிக்கது. இவர் தன் மாமாவான திருமாலுக்குரிய சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கிறார், வள்ளி, தெய்வானை அருகில் உள்ளார்.  மயில் இடது புறமாக திரும்பி நிற்பது மாறுபட்ட அமைப்பாகும்.  கார்த்திகை நட்சரத்தன்று, முருகனுக்கு துவரம்பருப்பு சாதம் படைத்தல் மாங்கல்ய  தோஷம், நாகா தோஷம் அகலும்.  மனைவியுடன் தனி சன்னதியில் புகழ்த்துணை நாயனார் இருக்கிறார்.

Post a Comment

0 Comments